திருச்சி : மத்திய மண்டல ஐ.ஜி. அறிவுறுத்தல்படி, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட, ஒன்பது மாவட்டங்களில், ‘காக்கி கவசங்கள்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின்படி, பெண் காவல் துறையினர், வாரந்தோறும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த குழந்தைகளை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.
கடந்த 15ல், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் காவல் நிலையத்தில், பணிபுரியும் பெண் காவலர் திருமதி. சந்தியா, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை, பார்க்கச் சென்றார். அப்போது, ஓமந்துார் கிராமத்தில், கொரோனாவால் தாயை இழந்த தனிஷ்கா, என்ற (6), வயது சிறுமிக்கு பிறந்த நாள் என்பதை அறிந்து, அவரது வீட்டுக்கு சென்ற பெண் காவலர், சிறுமியுடன் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடினார். பெண் காவலரின் செயலை, மத்திய மண்டல ஐ.ஜி. திரு. பாலகிருஷ்ணன், பாராட்டி உள்ளார்.