அரியலூர்: சைபர் கிரைம் காவல்துறையினர் டெல்லி சென்று இணைய மோசடிக்காரர்கள் 4 நபரை கைது செய்தனர்.
அரியலூர் சேர்ந்த விவசாயி ஒருவரை மொபைல்போன் டவர் அமைப்பதாக முன்பணம் 40 லட்சம் மற்றும் மாதம் வாடகை 40 ஆயிரம் தருவதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பி அவரிடம் இருந்து சிறுக சிறுக ரூபாய் 24 லட்சம் ஏமாற்றிய இணைய மோசடிக்காரர்கள் 4 நான்கு பேரை அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணசுந்தர் I.P.S., அவர்கள் வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.திருமேனி அவர்கள் அறிவுரைப்படி டெல்லி சென்று முகாமிட்டு திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து அரியலூர் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.