காவல்துறைப் பதவிகள்

தமிழ்நாடு காவல்துறை பதவி மற்றும் குறியீடுகள்

தமிழ்நாட்டில் காவல்துறை பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;

 

காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP)

அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைத் தலைவர் (IGP)

ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைத் துணைத்தலைவர் (DIG)

அசோகச் சின்னம், அதன்கீழ் / வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP Sr-Grade)

அசோகச் சின்னம், அதன்கீழ் இரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறை கண்காணிப்பாளர் (SP)

அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (ASP)

அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP)

மூன்று நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறை உதவி கண்காணிப்பாளர் (ASST.SP-under training)

இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறை உதவி கண்காணிப்பாளர் (ASST.SP-under training)

ஒரு நட்சத்திரம் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP -TPS)

அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (ASP -TPS)

அசோகச் சின்னம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP -TPS)

மூன்று நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

காவல் ஆய்வாளர் (Inspector)

மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

காவல் உதவி ஆய்வாளர் (Sub-Inspector)

இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

காவல் உதவி ஆய்வாளர் (Asst. Sub-Inspector)

ஒரு நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

தலைமைக் காவலர் (Head Constable)

சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

முதல்நிலைக் காவலர் (PC-I)

சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

இரண்டாம்நிலைக் காவலர் (PC-II)

பட்டை எதுவுமில்லை.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.