கோவை: போக்ஸோ விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள் – ஐ.ஜி. சுதாகர், அறிவுரை இன்று 19.03.2022-ம் தேதி கோவை பணியிடை பயிற்சி மையம் சார்பாக, கோவை காவல் சரகத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை, திருப்பூர் மாநகரங்களை சார்ந்த அனைத்து பெண் காவல் அதிகாரிகளுக்கும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை கையாள்வது சம்மந்தமாக ஒரு நாள் பயிலரங்கம், கோயம்புத்துாரிலுள்ள நீலாம்பூர் PSG iTech கல்லூரியில் நடைபெற்றது. மேற்படி பயிலரங்கத்தை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஆர்.சுதாகர், அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றி கடந்த ஓராண்டில் போக்சோ (POCSO) வழக்குகளில் சிறப்பாக கையாண்டு, அதிகப்படியான வழக்குகளில் தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்களுக்கும், கேடயங்களை பரிசாக வழங்கினார்.
அதேபோன்று மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான எதிரிகளை குண்டர் தடுப்புக் காவலில் வைத்ததற்காக காவல் அதிகாரிகளுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். இப்பயிலரங்கத்தில் நீதித்துறை, மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினர். பணியிடை பயிற்சி மையத்தின் பொறுப்பு அதிகாரியான கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற முனைவர் இப்பயிலரங்கத்தில், உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை 150-க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகளும், கோவை சரகத்திற்குட்பட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.