சென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பள்ளிகரனை காவல் நிலைய காவலர்கள் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினத்தில் நேற்று முன்தினம் பள்ளிகரணை காவல் நிலையத்தில் நடைபெற்றது.
தீங்கிலிருந்தும், ஆபத்திலிருந்தும் மக்களை பாதுகாக்கின்ற சவால் நிறைந்த, ஆனால் அதே வேளையில் இன்றியமையா கடமை பணியை நிறைவேற்ற அவர்கள் ஆரவாரமில்லாமல், அமைதியாகவும் தைரியத்தோடும் செயலாற்றுகின்றனர். இத்தகைய அரும்பணி ஆற்றுபவர்களுக்கு நமது மதிப்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதுதானே நாம் செய்கின்ற சரியான பதில்வினையாக இருக்கமுடியும்!
ஏனென்றால், இருளும், ஆபத்தும், வன்முறையும் அமைதியை சீர்குலைக்க முற்படுகையில் நமது உயிர்களை பாதுகாப்பதற்காக தங்களது உயிரையே தியாகம் செய்ய தயாராக, அச்சமின்றி களத்தில் இறங்குபவர்கள் நமது காவல்துறை பணியாளர்களே.
போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் முதன்மை ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை நிருபரும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா குடியுரிமை நிருபர் பிரிவு தமிழ்நாடு மாநில பொது செயலாளர் திரு.A.K.முத்துகுமார், குடியுரிமை நிருபர் பிரிவு தென்சென்னை மாவட்ட தலைவர் திரு.R.வெங்கடேஷ், குடியுரிமை நிருபர் திரு.M.ராஜ்குமார் மற்றும் அப்பகுதி குடியுரிமை நிருபர்கள் காவலர் தின இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தனர்.
இம்முகாமில் பள்ளிகரணை காவல் நிலைய காவலர்கள் பலர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு காவலர்களுக்கு காவலர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர். போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.