கோடைக்காலம் வந்துவிட்டால் அந்த வெப்பம் தாங்காமல் மக்கள் படும் கஷ்டம் எத்தனை எத்தனை? அதிலும் அஃனி நட்சத்திரம் போதும் நம்மை வறுத்து எடுக்க.
இந்த வெப்பத்தை தாங்காமல் நாம் குளிருட்டப்பட்ட அறைகளில் அடைந்துகொள்கின்றோம். இந்த கோடைக்கு இதமான உணவுகளையும், பானங்களையும் குடித்து நம் வெப்பத்தை தனித்துக்கொள்கின்றோம். இவை அனைத்தும் இந்த உலகத்தில் நமக்கு சாத்தியமாகும். ஆனால் நம்மை பாதுகாக்கும் காவலர்களுக்கு சாத்தியமா?
பெரிய அரசியல் தலைவர்களின் வருகைக்காகவும், சில தலைவர்களின் ‘பந்தபஸ்து’ போடும் பொழுது வெயிலில் நிற்கின்ற காவலர்க்கு டீ, காபி, சாப்பாடு, உள்ளிட்டவைகள் சரியான நேரத்திற்க்கு கிடைப்பதில்லை. இயற்கை அழைப்பு உள்ளிட்டவைகளுக்கும் வழிவகை இல்லாத நிலை.
குறிப்பாக போக்குவரத்து காவலர்கள் தினந்தோறும் சந்திக்கும் சவால்கள், பலதரப்பட்ட குற்றபின்னணி கொண்ட மனிதர்களை கையாளுவது உள்ளிட்டவைகள் காவலர்களை மனஅழுத்தத்திற்கு இட்டுச்செல்கின்றது.
இரவு நேரங்களில் குடி போதையில் பைக், கார் ஓட்டுநர்கள் செய்கின்ற பிரச்சனைகள், லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்வது, அதிக வேகம், வாகன சோதனையின் போது நிற்காமல் செல்வது, வாகனத்தை நிறுத்தும் காவலர்கள் மீது வாகனத்தை ஏற்றி விபத்து ஏற்படுத்துவது, அரசியல்வாதிகளின் உறவுகள் என்றும் உயர் அதிகாரிகளின் சொந்தங்கள் என்றும் கூறி சிபாரிசு செய்து கடமையை செய்ய விடாமல் தடுத்தல், காவலர்களை பொது இடத்தில் வைத்து அசிங்கமாக திட்டுவது, சமூக ஊடகங்களில் திட்டி பரப்புரை செய்வது இவை அனைத்திற்காகவும் வழக்கு பதிவு செய்தால், ‘தூக்கு மாட்டி செத்துவிடுவேன்’, ‘மண்ணெண்னை ஊற்றி எறித்து கொள்வேன்’, இரயிலில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டும் குற்றவாளிகள். மக்களின் நலனுக்காகவும், நம் உடைமைகளுக்காகவும் கண்விழித்து பணியாற்றும் நம் காவல்துறையினருக்கு நம்மால் இயன்ற ஒத்துழைப்பை தருவோம்.
யாரோ சில காவல் துறையை சேர்ந்த அதிகாரிகளும், சில காவலர்களும் செய்யும் தவறுகளுக்காக, நம் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை சொல்லுகிறோம். காவல் துறையிலும் மனிதாபிமானத்துடனும், மனித நேயத்துடனும் நடந்துக்கொள்ளும் பல காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையிலும் உண்மை.
எத்தனையோ வேதனைகள் கஷ்டங்களை தாங்கிக்கொண்டு பணியாற்றும் நம் காவலர்களுடன் அன்பாக ஆறுதலாக சில வார்த்தைகள் பேசலாமே. நாம் பேசும் சில அன்பான வார்த்தைகள் அவர்களை இன்னும் உற்சாகத்துடன் பணியாற்ற உதவியாக இருக்கும்.
கடந்த எட்டு ஆண்டுகளில் 7512 காவலர்கள் காவல் பணியே வேண்டாம் என்று விட்டு சென்றுள்ளனர். இத்தகைய நிலை நீடித்தால் நம் பாதுகாப்பு தான் கேள்வி குறியாகும் என்பதில் ஐயமில்லை.
வளரட்டும் காவல்துறை ! வாழ்த்துவோம் காவலர்களை அவர்களின் நற்பணிகளுக்காக !
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்