செங்கல்பட்டு : ஓட்டேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் திரு. பட்டாபி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி, காவலர் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாட்டில் உள்ள 12 பயிற்சிப் பள்ளிகளில் 1997 ஆம் ஆண்டு முதல் பேட்சில் பயிற்சி பெற்ற காவலர்கள், அதே ஆண்டில் உடன் பயிற்சி பெற்று உயிரிழந்த தலைமை காவலர்கள் பட்டாபி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
1997 ஆம் ஆண்டு முதல் பேட்ச் தலைமை காவலர்கள் 2577 , இணைந்து ”சங்கமம் குழு” மூலம் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு உதவி செய்ய உதவி செய்துவரும் நிலையில், ஓட்டேரி காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த தலைமை காவலர் பட்டாபியின், மனைவி மற்றும் மகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து சங்கமும் குழு சார்பில் திருடப்பட்ட 14 லட்ச ரூபாய்க்கான, காசோலை மற்றும் ரொக்க பணத்தினை உயிரிழந்த தலைமை காவலர் மற்றும் மகன்களிடம் வழங்கினார்கள்.