திருவண்ணாமலை : கடலாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சி காமராஜ் நகர் டாஸ்மாக்கில் வழிப்பறி செய்த வழக்கில் மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் திரு.சத்யாநந்தன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக புலன் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட எதிரிகளான 1)மணிகண்டன், வயது 21, ஆலத்தூர் கிராமம், செங்கம் தாலுக்கா 2)இசக்கி பாண்டி, வயது 23, சேரன்குளம், தூத்துக்குடி மாவட்டம் என்பவர்களை கைது செய்த மெச்சத் தகுந்த பணியை பாராட்டி இன்று வேலூர் சரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக தலைமை காவல் துறை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் இந்நிகழ்வில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர்.Z.ஆனி விஜயா,இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தனர்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்