திருவள்ளூர்: காவலர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் தமிழ்நாடு காவல்துறை காஞ்சிபுரம் காவல் சரகம் திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பெண் அதிகாரிகள் முதல் காவலர் வரை மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் முழு உடல் பரிசோதனை முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயில் மில்லில் உள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் முழு உடல் பரிசோதனை முகாம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் இசிஜி, ரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, பல், இதயம் போன்றவற்றை உள்ளடக்கிய காவல் துறையினருக்கு மருத்துவர்கள் உடல்நலப் பரிசோதனை செய்தனர். இதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்திய பிரியா மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண் குமார் ஆகியோர் தலைமையில் திருவள்ளூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெண் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 100 க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர் இம்முகாமில் தமிழ்நாடு அரசு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு வி. ஜி. ராஜேந்திரன் அவர்களும் மற்றும் வார்டு உறுப்பினர்களும் கட்சி நிர்வாகிகளும் பலர் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்