திருச்சி : திருச்சி மாநகர ஊர்காவல்படையில் கடந்த 18.01.2011-ஆம்தேதி முதல் பணிபுரிந்து வந்த திரு. A.அடைக்கலராஜ் என்பவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 18.05.21-ந்தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி 03.06.2021-ந்தேதி இறந்துவிட்டார். அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு.
அவருக்கு உதவும் வகையில் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து ரூ.15,000/- மற்றும் திருச்சி மாநகர ஊர்காவல்படையை சேர்ந்த ஆளிநர்கள் திரட்டிய நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ.85,000/-க்கான காசோலையை திரு. A. அடைக்கலராஜ் என்பவரின் மனைவி திருமதி. A.ஞானகியூரி என்பவரிடம் இன்று(02.04.22)-ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் வழங்கினார்கள். மேலும் காவல் உதவி ஆணையர், திருச்சி மாநகர ஆயுதப்படை, ஊர்காவல்படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி மற்றும் நிறும தலைவர் ஆகியோர் உடனிருந்தனர்.