தருமபுரி : தருமபுரி மாவட்டம், கடத்தூர் விநாயகர் கோவில் பகுதியில் சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந் 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கடத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி, தனுஷன், மற்றும் முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோர் , இதை பார்த்து அந்த பணத்தை எடுத்தனர்.பிறகு கேட்பாரற்று கிடந்த 25 ஆயிரம் பணத்தை கடத்தூர் காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரிடம் ஒப்படைத்தனர். பிறகு கேட்பாரற்று கிடந்த 25 ஆயிரம் ரூபாய் யாருடை பணம் என விசாரணை செய்தனர். அப்போது கடத்தூர் பகுதியில் உள்ள ஜவுளிகடை உரிமையாளர் ஆறுமுகத்தின் பணம் என தெரியவந்தது. பிறகு அவரை அழைத்து அந்த பணத்தை ஒப்படைத்தனர். சாலையில் கேட்பாரற்று கிடந்த கிடந்த ரூ.25 ஆயிரம் ரூபாயை எடுத்து வந்து காவல்நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்த 3 பேரையும் காவல்துறையினரும்,பொதுமக்களும் பாராட்டினர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.