திருவள்ளூர் : அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேரோட்ட விழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர் . போலீசார் பாது காப்பு பனியில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள வடகாஞ்சி என அழைக்கப்படும் . பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 9தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இரண்டாம் நாள் சூரிய சந்திர பிரபை மூன்றாம் நாள் பூதவாகனம் நான்காம் நாள் .நாக வாகனம். ஐந்தாம் நாள் மாவடி சேவை .ஆறாம் நாள் அம்பாள் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபேற்றது அதை தொடர்ந்து ஏழாம் நாளான இன்று திருத்தேர் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முக்கிய மாடவீதிகளில் சுமார் 47 அடி உயரமுள்ள திருத்தேரை பக்தர்கள் ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
இத்தேரின் சிறப்பு ஒருபுறம் சிவனும் மறுபுறத்தில் பெருமாளும் வடிவமைக்கப்பட்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தில் சிவனும். சித்திரை மாத பிரம்மோற்சவத்தில் பெருமாலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தமிழகத்திலேயே இக்கோவிலில் உள்ள தேரின் சிறப்பு இத் தேர் திருவிழா தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தில் எட்டாவது நாள் முருகர் புறப்பாடு மற்றும் குதிரை வாகனம் . பல்லக்கு . நடராஜர் புறப்பாடு.
என கடைசி நாளான 22ஆம் தேதி உற்சவ சாந்தி 108 சங்காபிஷேகம் மற்றும் ஊஞ்சல் சேவை திருக்கல்யானம் நடைபெற உள்ளது மேலும் இத் தேரானது சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டு தற்போது தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சிவபெருமானை வழிபட்டு செல்கின்றனர் இதில் பாதுகாப்பு பணியில் மீஞ்சூர் போலீசார் மற்றும் செங்குன்றம் வட்டார போக்குவரத்து உதவி ஆணையாளர் மலைசாமி காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் அசம்பாவீதம் நடக்காமல் இருக்க 100க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்