சென்னை: அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணை கைதிகளை ஆஜர்படுத்த வந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் விசாரணை கைதிகளை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற நபரை மடக்கிப் பிடித்த ஆயுதப்படை காவலர்கள் சேகர் மற்றும் மதனகுரு ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Commissioner of Police appreciated and rewarded Armed Reserve Police Sekar and Madhanaguru for arresting a person who attempted to stab and murder an accused at Allikkulam court premises.
சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் சேகர் (மு.நி.கா.295) மற்றும் காவலர் மதனகுரு (கா.50719) ஆகியோர் விசாரணை கைதிகள் ஐயப்பன் மற்றும் கார்த்திக் ஆகியோரை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்காக இருவரையும், 01.03.2022 அன்று சிறையில் இருந்து கைதி வழிக்காவலாக எடுத்துக் கொண்டு, மதியம் சுமார் 01.00 மணியளவில், அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் மாடிகளில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் விசாரணை கைதிகள் ஐயப்பன் மற்றும் கார்த்திக்கை கொலை செய்ய முன்வந்தார். உடனே, சுதாரித்துக் கொண்ட காவலர்கள் சேகர் மற்றும் மதனகுரு ஆகியோர் அந்த நபரை மடக்கிப் பிடித்து கத்தியை பறித்து, பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் உதயகனி (வ/60), சூளைமேடு என்பதும், உதயகனியின் மகன் அந்தோணி உபால்டு என்பவரை மேற்படி விசாரணை கைதிகள் ஐயப்பன் மற்றும் கார்த்திக் ஆகியோர் 16.9.2020 அன்று கொலை செய்ததும், இது குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் இருவரும் கைது செய்யப்பட்டதும், தனது மகனை கொன்ற ஐயப்பன் மற்றும் கார்த்திக் ஆகியோரை பழி வாங்குவதற்காக இருவரையும் கொலை செய்ய உதயகனி திட்டமிட்டு, நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்ததும் தெரியவந்தது. அதன்பேரில், எதிரி உதயகனி மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேற்படி சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் விசாரணை கைதிகளை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற நபரை மடக்கிப் பிடித்த ஆயுதப்படை காவலர்கள் சேகர் மற்றும் மதனகுரு ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (05.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்