திருவள்ளூர்: வழிப்பறியில் ஈடுபட்டர்களை விரட்டிப் பிடித்த போலீசார் பொன்னேரி, மார்ச்.14- விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்கமல் (57) லாரி டிரைவர் இவர் அத்திப்பட்டு புதுநகர் சாலை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு செல்போன் பேசிக்கொண்டு வெளியே வரும்போது அத்திப்பட்டு புதுநகரில் இருந்து மீஞ்சூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின்பேரில் மீஞ்சூர் ஆய்வாளர் பன்னீர்செல்வம் உதவி ஆய்வாளர் சைமன் துரை மீஞ்சூர் பஜாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது போலீசை கண்டதும் வேகமாக ஓட்டம் பிடித்த நபரை பிடித்து விசாரித்தபோது செல்போன் பறித்து கொண்டு வந்திருப்பது தெரியவந்தது பின்னர் அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது செயின் பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 6 சவரன் நகை கைப்பற்றப்பட்டது பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பகுதியைச் சேர்ந்த மணி( எ)நாகராஜ் (27) காளியப்பன் (25) என்பது தெரியவந்தது இருவரையும் கைது செய்து மீஞ்சூர் போலீசார் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர் விரைவாக நடவடிக்கை எடுத்த போலீசாரை பொது மக்கள் பாராட்டினர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்