திருநெல்வேலி : 23.03.2022-ம் தேதி நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த பாப்பா(37), என்பவர், மூன்றடைப்பு அருகே உள்ள தாழைகுளம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்படி பெண்ணை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த கவரிங் செயின், ரூ.1700 மற்றும் செல்போனை பறித்து க் கொண்டு தப்பி சென்று விட்டனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் அருகிலிருந்த காவல் நிலையங்களுக்கு இருசக்கர வாகனம் அடையாளம் மற்றும் வழிப்பறி ஈடுபட்ட நபர்களின் அடையாளம் குறித்து தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சேரன்மகாதேவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கண்ணன்(ப) மற்றும் காவலர் திரு.செல்லப்பாண்டி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சேரன்மகாதேவியிலிருந்து பாபநாசம் செல்லும் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி செல்லமுயலும் போது ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி நபர் சாத்தான்குளம், மேலபுளியங்குளத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு (22) என்பதும் மூன்றடைப்பு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபர் என்பதும் தெரியவந்தது.
பின்னர் மேற்படி எதிரியிடமிருந்து பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல் வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள், துரிதமாக செயல்பட்டு எதி ரி யை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு.கண்ணன்(ப) மற்றும் காவலர் திரு.செல்லபாண்டி அவர்களை நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.