திருநெல்வேலி : கொலை வழக்கில் எதிரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கொடுத்த களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் பாராட்டு .3.03.2022
கடந்த 2014ம் ஆண்டு களக்காடு, கோவிலம்மாள்புரத்தை சேர்ந்த நம்பி(62), மற்றும் அவரது மகன் ரமேஷ்(21) ஆகியோரை, நம்பியின் சகோதரி கணவரான சேரன்மகாதேவியை சேர்ந்த பாலையா(52) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 01.03.2022 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி திரு. ஜெசிந்தா மார்ட்டின் அவர்கள் எதிரி பாலையாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேற்படி வழக்கில் சாட்சிகளை விரைந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தி எதிரிக்கு தண்டனை பெற்று கொடுத்ததற்காக திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்கள் இன்று களக்காடு காவல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜோசப் ஜெட்சன் மற்றும் காவலர் திரு.ஐசக்ராஜா ஆகியோரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.