செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய ஊழியர் ஆனந்தராஜ். இவரது மகன் அர்ஷத் (12), அணுசக்திதுறை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில், நண்பர்களுடன் குளிக்க சென்றாான். அங்கு அர்ஷத் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தான். இதுகுறித்து கல்பாக்கம் காவல் துறையினருக்கு , தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மணிநேரம் போராடி அர்ஷத் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். காவல் துறையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.