சென்னை : மாதவரம் அடுத்த மணலி, தாமரை குளம் தெருவைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், (24), இவர், மீஞ்சூர், நாப்பாளையத்தில், உள்ள, கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, ‘சி.டி.100’ ரக, இரு சக்கர வாகனத்தில், 200 அடி சாலை வழியாக, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், மணலி அடுத்த கொசப்பூர், சந்திப்பில், எதிர் திசையில் வந்த ‘மாருதி சுசுகி’ கார் மோதி, கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை, காரை ஓட்டி வந்த நபர், 108 ஆம்புலன்ஸ் மூலம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவ பரிசோதனையில், சிவராமகிருஷ்ணன் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து, மாதவரம் பால்பண்ணை போக்குவரத்து காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.