செங்கல்பட்டு : பெரும்பாக்கம் , கார்பென்டர் உயிரிழப்பிற்கு காரணமான, போதை தண்ணீர், லாரி ஓட்டுனரை, பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் துறையினரிடம், ஒப்படைத்தனர். மேடவாக்கம், வெள்ளைக்கல் பாண்டியன், தெருவைச் சேர்ந்தவர் டில்லி (58), கார்பென்டர். இவர், நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, சோழிங்க நல்லுாரில், இருந்து மேடவாக்கத்திற்கு தன் ‘டி.வி.எஸ்., எக்ஸ்எல்’ இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
செம்மொழி சாலையில், தனியார் மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே, பின்னால் வந்த தண்ணீர் லாரி, டில்லியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே டில்லி, உயிரிழந்தார். இருசக்கர வாகனம், லாரியில் சிக்கிக்கொண்டதால், 500 மீட்டர் துாரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள் லாரியை மடக்கி, ஓட்டுனரை பெரும்பாக்கம்காவல் துறையினரிடம், ஒப்படைத்தனர். விசாரணையில், பெரும்பாக்கம், முத்தமிழ் நகரைச் சேர்ந்த ஏழுமலை, (48), என்பதும், மது போதையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஏழுமலையை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.