தர்மபுரி : காரிமங்கலம் பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. வெங்கட்ராமன், தலைமையில் காவல் துறையினர், ரோந்து சென்றனர். அப்போது காரிமங்கலம் பேருந்து நிலையம், ராமசாமி கோவில், அடிலம், சப்பாணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட, லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து, கொண்டிருந்த சிவகுமார் (45), கிருஷ்ணன் (37), அரவிந்த்பிரசாத் (27), சின்னபையன் (55), ஆறுமுகம் (47), ஆகிய 5 பேரை காவல் துறையினர், கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.