கோவை : கோவை சிங்காநல்லூர், காவல் நிலைய ஆய்வாளர் திரு .அருண், அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்குச் சென்று, தனியாக நின்றிருந்த மூன்று பெண் குழந்தைகளை விசாரித்தபோது, அவர்கள் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தை, சேர்ந்த (14), வயது மதிக்கத்தக்க மூன்று பெண் குழந்தைகள், சேர்ந்து நேற்று மதியம் 12.00 மணி அளவில் பட்டுக்கோட்டையில், இருந்து பேருந்தில் ஏறி கோவைக்கு, அவர்கள் வீட்டுக்கு தெரியாமல் யாரிடமும் சொல்லாமல், வந்துவிட்டார்கள்.
அவர்களை விசாரிக்க அவர்கள் பட்டுக்கோட்டை ,சேர்ந்தவர்கள் என்றும் வீட்டில் திட்டுவதாகவும், இதனால் கோபித்துக் கொண்டு வந்து விட்டதாகவும் , கூறியதால் இவர்களுடைய பெற்றோர்கள் பட்டுக்கோட்டை, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், இவர்களுடைய பெற்றோர்கள் தெரிவித்தார்கள். மேற்படி குழந்தைகளை பெண் காவலர்கள், மூலம் விசாரித்து அவர்களுக்கு தேவையான உணவு, மற்றும் அடிப்படை உதவிகளை செய்து கொடுத்து குழந்தைகள் நல காப்பகத்தில், குழந்தைகள் உதவி மையம் மூலம் தங்கவைக்கப்பட்டு , இன்று மேற்படி குழந்தைகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு, தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு, குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.