காஞ்சிபுரம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து பல தலைமறைவு குற்றவாளிகள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அதில் ஒரு பகுதியாக அச்சரப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சுமார் 21 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கடந்த எட்டு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இவர்களை கைது செய்வதில் சிறப்பாக பணியாற்றிய அச்சரப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.கோபிநாத் மற்றும் முதல் நிலை காவலர் திரு.ராமமூர்த்தி ஆகியோருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.