கோவை : கோவை அருகே உள்ள தெலுங்குபாளையம், வைத்தியர் ஆறுமுகம் உடையார், வீதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி . இவர் இறந்துவிட்டார் . இவரது மகன்கள்கார்த்திக் (25), அழகர்சாமி (21), இவர்கள் இருவரும் அங்கு ள்ள தனது பாட்டி வீட்டில், வசித்து வந்தனர் . கார்த்திக் பாட்டி மீனாவிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் கத்தியால், பாட்டியை குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு, அனுப்பி வைத்தனர் . இதுகுறித்து தம்பி அழகர்சாமி செல்வபுரம் காவல் துறையில்புகார் செய்தார்.காவல் துறையினர், கார்த்திக்கை நேற்றிரவு கைது செய்ததனர். இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
