தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், அரூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் லோகேஷ் (15), தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள கல்குவாரி, குட்டையில் தன்னுடைய நண்பர்களுடன் லோகேஷ் குளிக்க சென்றான். மழை பெய்த காரணத்தினால் குட்டையில் தண்ணீர் அதிகமாக இருந்தது. தண்ணீரில் மூழ்கி பலியானார். நண்பர்களுடன் சென்ற ஆர்வம் மிகுதியால், குட்டையில் இறங்கி லோகேஷ் குளிக்க முயன்றான்.
நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் லோகேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வைத்தனர். இதுகுறித்து அரூர் காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.