கோவை : கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் ,நரசிம்மபுரம் மணல்மேடு பகுதியை சேர்ந்த, வெங்கடலட்சுமி (19), இவர் குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார், கலை- அறிவியல் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக, விளாங்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் (22), என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வைத்திருந்தார் .20-4-22 க்குபிறகு, அவருடன் காதலை முறித்துக் கொண்டார்.
இந்த நிலையில் பாலமுருகன், வெங்கடலட்சுமி, படிக்கும் கல்லூரிக்குச் சென்று அவரைத் தாக்கி, காதலிக்குமாறு வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து வெங்கட லட்சுமி, குனியமுத்தூர் புகார் செய்தார் போலீசார் பாலமுருகன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை மிரட்டல் காவல் துறையில், தாக்குதல் உட்பட 4 பிரிவின் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவரைத் தேடி வருகிறார்கள். இவர் எலக்ட்ரிக் சர்வீஸ் எஞ்சினியராக வேலை பார்த்து வருகிறார்.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)