ஈரோடு : ஈரோட்டை சேர்ந்த (25), வயதுடைய 2 வாலிபர்கள், ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது, நாங்கள் சமூக வலைதளங்களை பார்த்து கொண்டிருந்தபோது சம்பவத்தன்று 2 இணையதள முகவரியில், இந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டால் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை நம்பி நாங்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டோம். ஆனால் யாரும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அந்த எண்ணில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், ‘நீங்கள் உல்லாசத்திற்கு அழைத்ததாக காவல் துறையில், புகார் செய்து விடுவோம் என்றும், காவல் துறையில், புகார் கூறாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டினர்.
இதனால் நாங்கள் பயந்துபோய் பணம் செலுத்தினோம். அதைத்தொடர்ந்து மறுநாள் மற்றொரு எண்ணில் இருந்து போன் வந்தது. அதில் பேசியவர், நாங்கள் காவல்துறையினர் , என்றும், உங்கள் மீது புகார் வந்துள்ளது. நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றும் மீண்டும் மிரட்டினர். இதனால் நாங்கள் அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.85 ஆயிரத்தை அனுப்பினோம். இதைத்தொடர்ந்து நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். எனவே எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பேரில் ஈரோடு சைபர் கிரைம் காவல்துறையினர் , இதுபற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பந்தப்பட்ட இணையதள முகவரிக்கு சென்று அந்த செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணையை தீவிர படுத்தினர். செல்போன் டவரை வைத்து அந்த கும்பல் கோவையில், பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், செல்போன் எண்களை போலியான பெயரில் வாங்கி, அதை இணையதளத்தில் பதிவிட்டு உல்லாசத்திற்கு அழைத்து நிறைய பேரிடம் பணம் கேட்டு மிரட்டியதும், கடந்த 6 மாதங்களில் மட்டும் இவர்கள் ரூ.4 லட்சம் வரை பல பேரிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்துகாவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர், வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :