காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் ( TNSCST ) சென்னை மூலம் தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை வளர்ப்பதற்கான 6 நாள் பயிற்சி நிகழ்ச்சியை மார்ச் 16 ஆம் தேதி முதல் மார்ச் 18 , 2022 வரை முதல் கட்டமாகவும் மற்றும் மார்ச் 21 ஆம் தேதி முதல் மார்ச் 23 , 2022 வரை இரண்டாம் கட்டமாக நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் நலனுக்காக நடத்தப்படுகின்றது.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழா 21.03.2022 அன்று காலை 09.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக காஞ்சிபுரம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் , Dr.M.சுதாகர், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் . இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் டீன் டாக்டர்.வி.கவிதா சிறப்புரை ஆற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் பேசி அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உதவி காவல் கண்காணிப்பாளர், மற்றும் காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்