திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஆங்கில வழி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மாணவி ஒருவருக்கு நட்பை வளர்த்துக் கொள்ள வீட்டிற்கு வருமாறு கைபேசி மூலம் உதவி பேராசிரியர் மகேந்திரன் அழைக்கிறார். அதற்கு அந்த மாணவி எதற்காக சார் நான் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும். என கேள்வி எழுப்ப அதற்கு பேராசிரியர் தற்போது நீ இறுதி ஆண்டு படித்து வருவதால் மேலும் நமது நட்பை வளர்த்துக் கொள்வதற்காக அழைப்பதாக கூற அதற்கு அந்த மாணவி தனக்கு இத்தகைய நட்பு தேவை இல்லை என எனக்கூறி அவரது அழைப்பை ஏற்க மறுக்கிறார்.
உதவி பேராசிரியரும், மாணவியும் கைப்பேசியில் உரையாடிய அந்த ஆடியோ வாட்ஸ்அப் எனப்படும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி இது தொடர்பாக கல்லூரி முதல்வர் சேகரிடம் புகார் அளித்ததாகவும், அதனடிப்படையில் மூன்று பெண் பேராசிரியர்கள் அடங்கிய மகளிர் குறை தீர்ப்பு குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும், சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியரிடம் நடத்திய விசாரணை பாலியல் புகார் உறுதி செய்யப்பட்டதால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி நிர்வாகம் உயர்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேலும் சில மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி காவல்துறையினர் நேரடியாக கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் மாணவிகள் சிலருக்கு பல்வேறு வகையில் உதவி பேராசிரியர் மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், அவர் எழுதிய புத்தகங்களை வாங்குமாறு மாணவ மாணவிகளுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததும் தெரியவந்தது .
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவரை காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றபோது கல்லூரி நுழைவு வாயில் முன்பாக வாகனத்தை வழிமறித்த மாணவர்கள் உதவி பேராசிரியர் மகேந்திரனை தாக்க முயன்றனர் அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதது, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உதவிப் பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மாணவிகளின் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்