திருச்சி : திருச்சி மாநகரம் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று (05.04.2022) திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகளிடையே இணையதளம் மூலமாக நடைபெற்று வரும்.
குற்றங்களான போலியாக செயலிகள் (App) மூலம் பெண்களுக்கு ஆசைகளை உருவாக்கி மாய வலையில் சிக்க வைப்பது தொடர்பாகவும், இதுபோன்ற பல்வேறு போலியான செயலிகள் மூலம் ஏற்படுத்தபடும் பண மோசடி, சமூகவலைத்தளங்களினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், புதிதாக உருவாக்கப்பட்ட “காவல் உதவி” செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அந்த கல்லூரியில் உள்ள அறிவிப்பு பலகைகளில் சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் 1930 மற்றும் இணைய முகவரி www.cybercrime.gov.in அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.