செங்கல்பட்டு: இன்று (13-04-2022) செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைெற்றது. செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணா சிங் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் உதவி காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் , ஆய்வாளர்கள், மற்றும் உதவிஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள கொலை,கொள்ளை குற்ற வழக்குகளை விரைந்து.
முடிக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது, குற்றபதிவெடு உள்ள குற்றவாளிகள், ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், பொதுமக்களிடம் பெறும் புகார்களுக்கு விரைவாக நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியும், காவல் நிலைய பணிகள் மற்றும் வழக்குகளை சிறப்பாக கையாண்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கும், செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல்களுக்கு பண வெகுமதி அளித்து பாராட்டினார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்