கரூர் : கரூர் நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவரது மனைவி பிருந்தா, 30, இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கார்த்திகேயன் மது பழகத்துக்கு அடிமையானதால், மனமுடைந்த பிருந்தா கடந்த மாதம், 23, ல் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில், திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிருந்தா, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, கரூர் டவுன் காவல் துறையினர் , விசாரிக்கின்றனர்.