கரூர்: மாவட்டம் குளித்தலை பகுதியில் தரகம்பட்டி என்ற இடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. பானுமதி அவர்கள் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினை குறித்தும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், குறும் படம் போட்டு காட்டியும், எடுத்துக்கூறியும், விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.