கரூர் : கரூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் ( 47), ஆர்.என்.புதூரை சேர்ந்த கஸ்தூரி (36), இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில், இருந்து நிலைதடுமாறி கஸ்தூரி, சாலையில் தவறி விழுந்தார். அப்போது மதுரையில் இருந்து, கரூர் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத, விதமாக கஸ்தூரி மீது ஏறி இறங்கியது.
இதில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி கஸ்தூரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.