கரூர் : கரூர் ஆத்தூர் பிரிவு அமிர்தாம்பால் , நகரை சேர்ந்த லோகநாதன் (25), இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மிஷின் ஆபரேட்டராக, பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக, தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது ஆத்தூர் பிரிவு அருகே அவரை வழி மறித்த 2 மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் லோகநாதன் பணம் தர மறுக்கவே அவரது மோட்டார் சைக்கிளை, பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் திருமதி. கஸ்தூரி, தலைமையிலான காவல் ஆய்வாளர், சம்பவ இடத்திற்கு வந்து, மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மோகன்ராஜ் (19), ஆகாஷ் (21), என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் காவல் ஆய்வாளர், கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.