ஈரோடு : ஈரோடு சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தம் செய்து கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஈரோடு சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை, பெருந்துறை, சேலம் மருத்துவமனைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என கூறினார். ஈரோடு சிறுமியிடமிருந்து கருமுட்டை எடுத்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு சிறப்பாக விசாரணை நடத்திய விசாரணை அதிகாரி ஈரோடு தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.விஜயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. காதர் பாஷா