கன்னியாகுமரி மாவட்டம்: 28.09.2019 தோவாளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் விஜய்(32). இவர் மீது பூதபாண்டி காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை தொடர்ந்து ஜஸ்டின் விஜயை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr. N.ஸ்ரீநாத் IPS* அவர்கள் மாவட்ட ஆட்சியர் *திரு.பிரசாந்த் வடநெரே IAS* அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி பூதபாண்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் ஜஸ்டின் விஜயை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.