விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மனோகர், அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) அறிவுரையின் பேரில், ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில், விருதுநகர் மாவட்டத்தில், உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த 7ம் தேதி முதல் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில், முத்தால் நகரைச் சேர்ந்த கனி என்பவரின் மனைவி விஜயலட்சுமி மீது, கந்துவட்டி வாங்கியதாக வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலோ, அல்லது அவர்கள் வசிக்கும் பகுதியில், உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களிலோ, அல்லது தங்களது பகுதியில், உள்ள காவல் நிலையங்களிலோ புகார் மனுக்களை கொடுக்கலாம். புகார்கள் மீது உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும். என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகர், அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி