திருச்சி: கடந்த 24.03.22-ந் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மா மண்டபம் சாலையில் உள்ள இரும்பு கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி பணம் ரூ.2000/- பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து , வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரிகள் 1)சக்தி (எ) சக்திவேல் 2)காளிதாஸ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் மேற்படி எதிரிகள் மீது கடந்த 23.03.22ந் தேதி மூலத்தோப்பு, திருவள்ளுவர் தெருவில் உள்ள எண்ணெய் கடையில் ரூ.5000/- பணத்தை பட்டாகத்தியை காட்டி கொள்ளையடித்த வழக்கிலும், மற்றும் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலையம் காட்டூரில் உள்ள எண்ணெய் கடையில் பட்டாகத்தியை காட்டி செல்போன் மற்றும் சில பொருள்களை கொள்ளையடித்த வழக்கிலும் தொடர்புடையர்கள் என தெரியவருகிறது.
மேலும் வழக்கின் எதிரிகளான 1)சக்தி (எ) சக்திவேல் மீது 5 வழக்குகளும், எதிரி 2)காளிதாஸ் மீது சில வழக்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி எதிரிகள் சக்தி (எ) சக்திவேல் மற்றும் காளிதாஸ் ஆகியோர்கள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு.
காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.