அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின்படி அரியலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குட்கா மற்றும் புகையிலை பொருள் சோதனையில், ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதனைத் தொடர்ந்த ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம், முன்னிலையில் ஜெயங்கொண்டம் சுகாதார ஆய்வாளர் திரு.பார்சல் கர்னல், அக்கடைக்கு சீல் வைத்தார்.