சேலம்: இன்று 03.03.2022- ந் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,I.P.S., அவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்கு வெப்பத்தை தாங்க கூடிய சோலார் தொப்பிகளை வழங்கியதோடு கோடை வெப்பத்தை தணிக்க எலுமிச்சை ஜூஸ் மற்றும் நீர்மோர் ஆகியவற்றை வழங்கி போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது திரு.N. மோகன்ராஜ் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர், தெற்கு மற்றும் திரு.T.சரவணன் காவல் உதவி ஆணையாளர் நுண்ணறிவு பிரிவு, திரு.A.வெங்கடேசன், காவல் உதவி ஆணையாளர், டவுன் சரகம், திரு.K.உதயகுமார் காவல் உதவி ஆணையாளர், போக்குவரத்துப் பிரிவு, நகர காவல் ஆய்வாளர் திருமதி.சம்பங்கி ஆகியோர்கள் உடன் இருந்தனர்.