திண்டுக்கல்: பெண் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 24.03.2022 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ம் வருடம் மூங்கில்பட்டியைச் சேர்ந்த பானுப்பிரியா (19/2014) என்பவரிடம் நத்தம் பட்டணம்பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி (32) என்பவர் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் சின்னத்தம்பி என்பவரை நத்தம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜமுரளி அவர்கள் மற்றும் நீதிமன்ற முதல் நிலைக் காவலர் திரு.சண்முகம் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 24.03.2022 திண்டுக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி திரு.புருஷோத்தம்மன் அவர்கள் குற்றவாளி சின்னதம்பி என்பவருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். இவ்வழக்கில் சிறப்பாக பணி செய்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா