கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 30 க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் புதுவை (பாண்டிச்சேரி ) மாநிலம் தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர் . இவர்களிடம் இருந்து 100 சவரன் வரை நகைகள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை இதே கும்பலை சேர்ந்த மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு காவல் துறையினருடன் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அதிரடியாக குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ், கடலூர் மாவட்ட பொதுமக்கள் பாராட்டினார்கள் .
நமது சிறப்பு செய்தியாளர்
குடந்தை
ப.சரவணன்