கடலூர் : கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி வாட்ஸ்அப் எண் 9087300100 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிமுகபடுத்தினார்.
பொதுமக்கள் இந்த வாட்சப் எண்ணை பயன்படுத்தி குற்ற தகவல், போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் மாவட்ட காவல்துறை மூலம் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.















