கடலூர்: புதுவை, வாணரப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் என்ற முனிவேலு (34). ரவுடியான இவர் கடந்த 3ம்தேதி ஆட்டுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. முனிவேலுவின் உறவினர்கள், நண்பர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி சாணிக்குமாருடன் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சீனியர் எஸ்பி ராஜீவ் ரஞ்சன் உத்தரவுக்கிணங்க ஆய்வாளர் தனசெல்வம் தலைமையிலான காவல்துறையினர், ரவுடி சாணிக்குமார் மற்றும் அவனது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். இதற்காக கடந்த சில நாட்களாக கடலூரில் முகாமிட்டுள்ளனர்.