மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி சபரி என்பவர் தான் தும்பைப்பட்டி கிராமத்தில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருவதாகவும், தன்னுடைய பெண் கடந்த 14.2.2022 தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை என்றும், மேலூர் காவல் நிலையத்தில் கடந்த 15.2.22 ம்தேதி புகார் கொடுத்துள்ளார். மேற்படி ,சபரி என்பவர் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் வழக்குப் பதிவு செய்தால், தன்னுடைய மகளின் விவரம் பத்திரிக்கையில் வந்துவிடும் என கருதி மட்டும் மனு ரசீது மட்டும் பதிய கேட்டுக்கொண்டார். சம்பந்தமாக மேலூர் காவல் நிலையத்தில் மனு ரசித்து கொடுக்கப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.
பின்னர், மேலூர் காவல் நிலைய அதிகாரிகளின் கேட்டுக் கொண்டதின்பேரில், மனுதாரர் வழக்கு பதிவு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மேலூர் காவல் நிலையத்தில் Girl Missing என கடந்த 21.2.22 ம்தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.மேற்படி வழக்கின் விசாரணையில் காணாமல் போன பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா என்பவரை காதலித்ததாகவும், அவருடன் சென்றிருக்கலாம் என்றும் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த 3.3.2022 ஆம் தேதி காலை மேற்படி தும்பை பட்டியைச் சேர்ந்த நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம் என்பவர் மேற்படி காணாமல் போன பெண்ணை மயக்க நிலையில் அவருடைய தாயார் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். உடனே, மேற்படி பெண்ணின் தாயார் தன்னுடைய மகளை மேலூர் தனியார் மருத்துவமனைக்கு காலை 11 மணிக்கு கூட்டிச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். அங்கு மருத்துவரின் ஆலோசனை பேரில் அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு உடல் நிலை மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் மயக்க நிலையில் இருந்ததால், அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக உடனே விசாரணை செய்து சிறுமியை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 3 தனிப்படைகள் இல் ஒரு தனிப்படையினர் திருப்பூருக்கு மற்றொரு தனிப்படையினர் சென்னைக்கும் மற்றொரு தரப்பினர் மதுரைக்கும் விரைந்தனர் 5.3.22ம் தேதி மேற்படி தனிப்படையினர் விசாரணையில் தலைமறைவாக இருந்த அப்பெண்ணை கூட்டிச் சென்ற நாகூர் ஹனிபா என்பவரை, தனிப்படையினர் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் நாகூர் ஹனிபா அந்த சிறுமியை காதலித்து வந்ததாகவும், கடந்த 14. 2.2022 தேதி நாகூர் ஹனிபா சிறுமியை மதுரையில் உள்ள தனது நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்கு தனது நண்பர்களின் உதவியால் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராஹிம் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார் . பின்னர் நாகூர் ஹனிபாவின் தாயார் அந்தப் பெண்ணை நீ தான் கூட்டி சென்றார் என ஊருக்குள் பேசிக் கொள்வதாகவும் நிச்சயமாக இது சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார் .
அதன் பிறகு, மேற்படி நாகூர் ஹனிபா 3 எலி பேஸ்ட் வாங்கி மற்றும் தான் மற்றும் அந்த சிறுமியும் தற்கொலை செய்து கொள்ளலாம் என எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளனர் . ஆனால், நாகூர் ஹனிபா அதை சாப்பிடாமல் வெளியில் துப்பியுள்ளார் ஆனால், அந்த சிறுமி சிறிதளவு எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார் . பின்னர், அச்சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவே, அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் எலி மருந்து சாப்பிட்டதை சொல்லாமல் சிகிச்சை பெற்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு கையில் டிரிப் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ,அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ,மேற்படி நாகூர் ஹனிபா அந்தச் சிறுமியை தும்பைப்பட்டி அழைத்து வந்து தன்னுடைய தாயார் மதினாவிடம் 2.3.2022ஆம் தேதி இரவு சிறுமியின் தாயாரிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர், காலையில் மதினா பேகம் சிறுமியின் தாயார் இடத்தில் ஒப்படைத்துள்ளார். தற்போது, சிறுமி எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார் என்ற விவரம் தெரிந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்படி சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ அதிகாரிகளின் அறிக்கையில் மேற்படி சிறுமிவேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக படவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பள்ளிபாளையத்தில் தலைமறைவாக இருந்த எதிரி (1)நாகூர் ஹனிபா என்பவரை தனிப்படையினர் 5.3.22 ம் தேதி கைது செய்தனர். மேலும், அவருக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர் மதுரையைச் சேர்ந்த (2)பிரகாஷ், திருநகர், என்பவரை சென்னையில் வைத்தும் (3)பெருமாள் கிருஷ்ணன், திருப்பரங்குன்றம் (4)ராஜாமுகமது மற்றும் திருப்பூரைச் சேர்ந்த எதிரியின் நண்பர் (5)சாகுல் ஹமீது என்பவரை பல்லடத்தில் வைத்தும் கைது செய்து மேலூர் அழைத்து வந்துள்ளனர்.
அதேபோல் எதிரி நாகூர் ஹனிபாவின் தாயார் (6)மதினா பேகம் எதிரியின் தாய்மாமா மனைவி (7)ரம்ஜான் பேகம் என்ற கண்ணம்மாள் மற்றும் அவரது உறவினர் (8)சுல்தான் அலாவுதீன் (நாகூர் அனீபாவின் தந்தை) தும்பைப்பட்டி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் உள்ள 10 குற்றவாளிகளில் 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இவ் வழக்கில் எதிரிக்கு உதவிய 2 நபர்களை கைது செய்ய தனிப்படையினர் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் எதிரியானவன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வழக்கின் சட்டப்பிரிவுகள் போக்சோ, சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படமோ பெயரோ எந்த ஊடகத்திலும் பதிவு செய்யக்கூடாது மற்றும் சமூக வலைத் தளங்களிலோ பகிரவும், பதிவேற்றம் செய்யவும் கூடாது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தையோ பெயரையோ சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய கூடாது என்றும், மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயரை சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடகங்களில் பயன்படுத்தி அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
மேலும், இவ்வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் , மேலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் மேலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆகியோர்களுக்கு உத்தரவிட்டுள்
ளார்கள்.