மதுரை : மதுரை மாவட்டத்தில், புறநகர் பகுதிகளில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தல், நடைபெற்று வருகிறது .
இதனை தடுப்பதற்காக, குடிமை பொருள் வழங்கல் கடதல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், தீவிர வாகன சோதனையில், ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மதுரை அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில், தனியார் குடோனில் டன் கணக்கில் ரேஷன் அரசிகள், பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில், 21 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
ரேசன் அரிசி கடத்திய பிரபல ரேஷன் கடத்தல், மன்னன் கொரிலா முத்து மற்றும் அவரது கூட்டாளிகள், 12 பேர் என உணவு கடத்தல், தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. எனவே ,அவர்களை குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், கைது செய்தனர். தொடர்ந்து, வேறு இடங்களில் ரேசன் அரிசி பதுக்கி வைத்துள்ளார்களா, என்பது குறித்து 12 பேரையும் தீவிர விசாரணை, மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி