தென்காசி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திர பாபு IPS அவர்களின் உத்தரவின் பேரிலும் ,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருகிருஷ்ணராஜ் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் சட்டவிரோதமாக குட்கா,கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பௌத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்பணம்பட்டி பகுதியில் சார்பு ஆய்வாளர் திரு. கிருஷ்ணன்
அவர்கள் ரோந்துப் பணியில் இருந்தபோது அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திர பாண்டி என்பவரின் மகன் ராமச்சந்திரன் (47) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.