கோவை : பாலக்காடு மாவட்ட எஸ்.பி., திரு .விஸ்வநாதன், அறிவுரை படி, மாவட்ட போதை தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., திரு. அனில்குமார், தலைமையில், நேற்று காலை கோவை, கொச்சி தேசிய நெடுஞ்சாலை வாளையாரில், வாகன சோதனை நடத்தினர். கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த சொகுசு, காரில் நடத்திய சோதனையில், 65 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் இருந்த மலப்புரம் மாவட்டம் பெரிந்தல், மண்ணாவை சேர்ந்த அப்துல் கரீம் (49), வயநாடு மாவட்டம் கல்பறாவை சேர்ந்த முகமது பாசில் (36), ஆகியோரை கைது செய்தனர். அப்துல் கரீம் மீது, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏழு வழக்குகளும், பாசில் மீது ஒரு வழக்கும் உள்ளது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.