சிவகங்கை : தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 21, கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42 குற்றவாளிகள் கைது சிறையில், அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் கஞ்சா விற்ற பணத்தை பரிவர்த்தனை செய்ய பயன்படுத்திய, அவருடைய வங்கி கணக் குகளும், அவர்களுடைய கணவன்/ மனைவி வங்கி கணக்குகளும் உட்பட 17 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. தா. செந்தில்குமார், அவர்கள் கூறுகையில் “மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடைபெற்று வருகிறது.
கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ,அவர்கள் பண பரிவர்த்தனை செய்யப்படும் வங்கி கணக்குகள் முடக்கப் படுவதோடு, அவர்கள் கஞ்சா விற்பனை மூலம் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில், ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி/ கல்லூரிகளில்கஞ்சா மற்றும் போதை பொருட்களின் தீமைகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குற்றச்செயல்களை, கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்று தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
