காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் சூப்பிரண்டு டாக்டர் திரு. சுதாகர், நிருபர்களிடம் கூறியதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதன்படி காஞ்சிபுரம் , மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில், உள்ள காவல் நிலையங்களில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுமார் 117 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் , நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள்களால், ஏற்படும் தீமைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்டம், முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இளம் சமூகத்தின் கனவுகள், லட்சியங்களை சீரழிக்கும் போதை பொருள் விற்பனையை தடுத்து, நடவடிக்கை எடுத்து வரும் காஞ்சிபுரம் காவல் மாவட்ட சூப்பிரண்டுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்